திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த அவர், இந்தத் தேர்வு அடிப்படையிலேயே தவறானது எனக் காட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு சமூக நீதியைப் பாதுகாப்பதில் முன்னோடியாக இருந்து, முதல் அரசியல் சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த வரலாற்றைக் கொண்ட மாநிலம் என்ற வகையில், நீட் ஒழிப்பே தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, மூன்று முக்கிய உறுதிமொழிகளுடன் அது கொண்டு வரப்பட்டது.

பல்வேறு நுழைவுத் தேர்வுகளின் சுமையைக் குறைக்கும், வணிகமயமாக்கலை ஒழிக்கும், மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் என்பவை அந்த உறுதிமொழிகள். ஆனால், இன்று அந்த உறுதிமொழிகள் அனைத்தும் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டன என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். பள்ளிக் கல்வியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பயிற்சி மையங்களை நோக்கி மாணவர்களைத் தள்ளியது மட்டுமே நடந்துள்ளது.
இதையும் படிங்க: நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!
கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு இது பெரும் தடையாக மாறியுள்ளது. நகர்ப்புற செல்வந்தர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் வகையில், சமூக நீதியைப் பாதித்துள்ளது. தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியும், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்காதது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரான செயல் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!