திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பங்கேற்றார். இந்த விழாவில் சுமார் 30,000 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, சுமார் 1,082 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதனுடன், ஒரு லட்சத்து 2 ஆயிரம் பயனாளிகளுக்கு நில உரிமைப் பட்டாக்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி முதல் ரூ.1,595 கோடி வரையிலான மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் புதிய வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார், எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் 1,595 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்று, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: ஆவின் பால் விலை உயர்வா? எது உண்மை... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!
நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுக அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால்... Very sorry, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று கூறினார். தமிழ்நாட்டின் reality-யும் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் dignity-யும் உணராமல் பொய்க் குற்றச்சாட்டுகளை வாசிப்பவர்களுக்கு, பக்தர்கள் போற்றும் ஆட்சி இது என மக்கள் தீர்ப்பில் தெரியவரும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மதக்கலவரம் ஏற்படுத்த மும்முரம்... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு தேவை... திருமா வலியுறுத்தல்...!