உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2025 ஜூலை 15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட ஒரு மக்கள் நலத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் அரசு சேவைகளை மக்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு செல்வதும், மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதும் முக்கிய நோக்கம். இதற்காக மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் ஜூலை 15, முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன.
மொத்தம் 10,000 முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். இவற்றில் 3,768 முகாம்கள் நகர்ப்புறங்களிலும், 6,232 முகாம்கள் கிராமப்புறங்களிலும் நடத்தப்படும். முதல் கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14,வரை பல மாவட்டங்களில் முகாம்கள் நடைபெறும். எடுத்துக்காட்டாக, சென்னையில் 400 முகாம்கள், சேலத்தில் 432 முகாம்கள், கோயம்புத்தூரில் 334 முகாம்கள், ஈரோட்டில் 340 முகாம்கள், திருச்சியில் 351 முகாம்கள், மற்றும் விருதுநகரில் 349 முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உடல் நல குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் தொடர்பாக தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி பொதுமக்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க: மக்கள் கிட்ட கனிவா.. கவனமா நடந்துக்கோங்க! காவலர் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு முதல்வர் அதிமுக்கிய அறிவுறுத்தல்..!
முகாம்களில் உரிய முறையில் கோரிக்கைகள் ஏற்கப்படுகிறதா என்பது குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதலமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் பேசினார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன், பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, தலைமைச் செயலாளர் முருகானந்தத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: மக்கள் என்ன சொல்றாங்க? மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை..!