தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சார மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பல்வேறு அரசியல் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சம்பவம் தொடர்பாக முழு விளக்கத்தை அளித்தார். விஜய் தாமதமாக வந்ததால் நிலைமை மோசமானது என்று முதலமைச்சர் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்புச் செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் கரூர் சம்பவத்திற்கு காரணம் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்த நிலையில், கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து ரூபா... அப்பதான் விஜய் மேல செருப்பு வீசுனாங்க... நயினார் ஓபன் டாக்..!
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: விஜயை வேடிக்கை பார்க்கவே மக்கள் கூடினார்கள்... நாங்க நல்லது தான் செஞ்சோம்... பேரவையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்...!