சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்ட பிறகுதான் முதல் அமைச்சர் பேசியிருக்க வேண்டும் என்றும் முதலில் முதலமைச்சருக்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் எனவும் சபாநாயகருக்கு கேள்வி முன்வைத்தார். தொடர்ந்து கரூர் சம்பவத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து திமுக அரசை குற்றம் சாட்டினார்.
உறுப்பினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர், சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி உரையாற்றினார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளை விவரித்தார்.

கரூர் கூட்ட நெரிசலை அடுத்து அரசு எடுத்த துரித நடவடிக்கைகளால் தான் பொதுமக்கள் பலர் காப்பாற்றப்பட்டதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அரசின் மீது குறை கூற முடியாமல் தோல்வி முகத்துடன் தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக விமர்சித்தார். நடிகர் விஜயை வேடிக்கை பார்ப்பதற்காகவே கரூரில் மக்கள் கூடியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் மர்மம் இருக்கு! சந்தேகத்தை கிளப்பிய இபிஎஸ்…!
வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பு தரப்பட்டதாகவும் அமைச்சர் ரகுபதி கூறினார். முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிய திட்டங்களால் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் கடும் அமளி... சபாநாயகரே நடவடிக்கை எடு... அதிமுகவினர் வெளிநடப்பு...!