கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறியுள்ளார். பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், கேரள முதலமைச்சர், அன்புத் தோழர் பினராயி விஜயனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

முற்போக்கான நிர்வாகத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பும், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மைக்கான எங்கள் உறுதிப்பாடும் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாக கூறினார்.
இதையும் படிங்க: மூக்குத்தியை கழற்றி தேர்வு எழுத வைக்கிறீர்களே., பயங்கரவாதிக்கு உடனே பதிலடி கொடுக்க தெரியாதா? சீமான் காட்டம்..!

இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து நின்று கலாச்சார உறவுகளையும் பொதுவான நலன்களையும் கொண்டாடட்டும் என்றும் உங்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. நிதி பகிர்வு குறித்து விவாதிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்!