சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கே வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். அப்போது, நான் முதல்வன் திட்டத்தில் என் நம்பிக்கையை காப்பாற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும் என தெரிவித்தார். எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்த எத்தனை பேர் வெற்றி பெற்று உள்ளார்கள் என்று தான் அதிகாரிகளிடம் கேட்பேன் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

ஒவ்வொரு குழந்தைகள் வெற்றி பெறும் போதும் தந்தை போல் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் நான் முதல்வர் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பணி நியமனத்தை பெற்றுள்ளனர் என்றும் நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து திறன் பயிற்சி வழங்கி வருகிறோம் என்றும் தமிழ்நாடு என்றால் சிறந்த கல்வி, திறனறிவு, எதிர்காலத்திற்கு வழி காட்டுவதாய் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!

யுபிஎஸ்சி தேர்வு வெற்றி பெற்றவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் படித்தவர்கள் எனவும் 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கும் பணி நியமனம் கிடைத்துள்ளது., கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்டாப் கொடுக்க இருக்கிறோம்., கல்வியை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்...உங்களுக்கு உதவுவதற்காக நானும் திராவிட மாடல் அரசும் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு ஒரு விரலா ஒடச்சாங்க.. தண்ணி கேட்டா செருப்பால அடிச்சாங்க! அஜித் கொலை குறித்த அதிர்ச்சி தகவல்..!