சமத்துவ பொங்கல் விழா என்பது பொங்கல் பண்டிகையை சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு சிறப்பு வடிவமாக தற்போது பரவலாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான தைப்பொங்கலை, சமூக சமத்துவத்தின் அடையாளமாக மாற்றி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் என பல்வேறு தளங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை முதன்மையாக விவசாயிகளின் நன்றியுணர்வு வெளிப்பாடாகவும், சூரியனுக்கும், மழைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் திருநாளாகவும் இருந்தாலும், சமத்துவ பொங்கல் என்ற கருத்து சமீப ஆண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனிடையே,சென்னை தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றுபவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் வழங்கினார்.பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருவதாக தெரிவித்தார். எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உழைத்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தள்ளாடி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் செல்லும் மூதாட்டி...! தாயுமானவர் திட்டம் என்னாச்சு? அதிமுக கண்டனம்..!
நாங்கள் மட்டுமல்ல நீங்களும் சேர்ந்துதான் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலகத்திலிருந்து நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அப்படிப்பட்ட உங்களுடன் இந்த பொங்கலை கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இந்த மகிழ்ச்சி உங்களது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் தீய சக்தியை அகற்றுவது கட்டாயம்... போகிப் பண்டிகை நாளில் நயினார் உறுதி..!