சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, பணி நியமன ஆணைகளை வழங்கிய பிறகு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்றும் தமிழ்நாடு அமைதி பூங்கா என்று இந்திய அளவில் கூறுவதாக தெரிவித்தார். போலீஸ் இருக்கிறார்கள் அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பி தான் மக்கள் நடமாடுகிறார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிதாக காவல் துறையில் பணியில் சேர்ந்தவர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதிகாரத்தை மக்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொறுப்பும் கடமையும் அதிகம் என்று கூறினார். ஒரு காவலர் செய்யும் நல்ல செயல் அந்த துறைக்கே பெருமையை ஏற்படுத்தி தரும் என்றும் வீரத்தின் விளை நிலம் என்பது அன்புதான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு போராடும் என காட்டிய வீரச்சுடர்கள்... வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முதல்வர் புகழாரம்..!
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை வெறும் வார்த்தைகளில் இல்லாமல் அதனை நடத்திக் காட்ட வேண்டும் என்றும் முதல்வர் அறிவுரை வழங்கினார். குற்றம் செய்பவர்களிடம் இரும்பு கரத்தையும் புகார் அளிக்க வருபவர்களிடம் அன்பையும் காட்டுங்கள் என்று தெரிவித்தார். மேலும் பல்வேறு அறிவுரைகளை காவலர்களுக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: திரும்ப திரும்ப நடந்தா கொலை... சிறுவன் இறப்புக்கு திமுக அலட்சியமே காரணம்... EPS குற்றச்சாட்டு...!