தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. மதுரையில் விமானம் மூலம் வந்தடைந்த முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் சென்றடைந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை பல இடங்களில் திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அடுத்த பாய்ச்சலுக்கான எட்டு அறிவிப்புகள் என்று கூறி அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்காக 14 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை எட்டு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பழனி தீர்த்த குளங்கள் 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். நத்தம் கலை அறிவியல் கல்லூரிக்கு 18 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார். ஏழு கோடி ரூபாய் செலவில் முருங்கை பதப்படுத்தும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் திண்டுக்கல் பயணம்... திட்டப்பணிகள், பேருந்து சேவையை தொடங்கி வைத்து சிறப்பிப்பு...!
கொடைக்கானல் பயணிகளுக்காக 100 ஏக்கர் பரப்பில் உலக தரம் வாய்ந்த சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 17 கோடி ரூபாயில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும் என்றும் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்த திட்டங்களை செய்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்று இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார்..! அமைச்சர் மூர்த்தி பேட்டி...!