தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. மதுரையில் விமானம் மூலம் வந்தடைந்த முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் சென்றடைந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை பல இடங்களில் திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க முதலமைச்சரை வரவேற்றனர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 61 புதிய பேருந்து சேவைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

38 புதிய நகர பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். திண்டுக்கல்லில் 174 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திண்டுக்கல்லில் 337 கோடியே 84 லட்ச ரூபாய் மதிப்புள்ள 111 முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார்..! அமைச்சர் மூர்த்தி பேட்டி...!
மேலும் 1082 கோடி ரூபாயில் 2 லட்சத்து 66 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 1595 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல்வர்... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்...!