தமிழ்நாட்டின் கிராமிய வாழ்வில் ஆழமாக வேரூன்றிய ஒரு தொன்மையான பாரம்பரியம் தான் ஜல்லிக்கட்டு. இது வெறும் விளையாட்டு அல்ல. தமிழர்களின் வீரத்தை, கலாச்சார அடையாளத்தை உலகறியச் செய்யும் ஒரு கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் இந்த வீர விளையாட்டு, பொங்கல் பண்டிகையின் ஒரு அங்கமாக, மாட்டுப் பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம். காளையின் திமிலைத் தழுவி அடக்கும் இளைஞர்களின் துணிச்சல், அச்சமற்ற தன்மை ஆகியவை தமிழ் மண்ணின் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
பொங்கல் கொண்டாட்டங்களுடன் இணைந்த ஜல்லிக்கட்டு, அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடுகளை போற்றும் ஒரு விழாவாக உருவெடுத்தது. விவசாய வாழ்வில் மாடுகள் முக்கிய பங்கு வகித்ததால், அவற்றின் வலிமையைப் பெருமைப்படுத்தும் விதமாக இது நடத்தப்பட்டது. கங்கையம், புலிகுளம், உம்பளச்சேரி போன்ற உள்நாட்டு காளை இனங்களைப் பாதுகாக்கும் ஒரு முறையாகவும் ஜல்லிக்கட்டு செயல்பட்டது. இன்றும் இந்த இனங்கள் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கப்படுகின்றன.
அவை உயர்ந்த விலைக்கு விற்பனையாகின்றன. ஜல்லிக்கட்டின் பெருமை அதன் கலாச்சார முக்கியத்துவத்தில் உள்ளது. இது தமிழர்களின் அடையாளமாக, தமிழ் பெருமையாக விளங்குகிறது. கிராமிய சமூகத்தில் வீரத்தை வெளிப்படுத்தும் இந்த விளையாட்டு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற இடங்களில் நடக்கும் போட்டிகள் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றன.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல்வர்... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்...!
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். இதைப்போல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிமுக - பாமக கூட்டணி முடிவு..! ஒப்பந்தம் கையெழுத்தானது..!