சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை கவனம் செலுத்தவும் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

சரியாக செயல்படாதவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து பொறுப்புணர்வோடு பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பெண்களுக்கான திட்டங்களை அதிக அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக மே 15ஆம் தேதிக்குள் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 1ல் திமுக பொதுக்குழு கூட்டம்! அடுத்தடுத்து நிறைவேறிய அதிரடி தீர்மானங்கள்..!
இதையும் படிங்க: பாஜகவின் அடக்குமுறைக்கு அடிப்பணிந்தார் எடப்பாடியார்! சரமாரியாக விளாசிய முதலமைச்சர்...