நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூரில் இன்று திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில விவசாய அணி செயலாளர் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ கே எஸ் விஜயன் பேசினார். தொடர் மழையின் காரணமாக நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு விடுத்ததாகவும் அதன்படி ஆய்வு குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்து அறிக்கையை வாங்கியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் வழக்கம்போல் மத்திய அரசு நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வரவில்லை என்றும் விமர்சித்தார். அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 1.79 லட்சம் தன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என்றும் ஆனால் திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளிலேயே 1.99 லட்சம் மெட்ரிக் டன் மேல் கொள்வது செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "போதும்... போதும்....லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..." - ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ஆர்.பி.உதயக்குமார்...!
இவ்வாறு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பாதுகாவலனாக முதலமைச்சர். விளங்கி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார் என்றும் அதற்கு விவசாயிகள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: #BREAKING "ஆர்.என்.ரவியை அவ்வளவு லேசுல விடமாட்டேன்... " - ஆளுநருக்கு எதிராக சபதமேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...!