தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகம் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இது மருத்துவர்கள், நோயாளிகள், மற்றும் சுகாதாரத் துறையின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் பல சவால்களை உருவாக்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவை இந்தப் பணிச்சுமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் பெரும்பாலும் 24 மணி நேர ஷிஃப்டுகளில் பணியாற்ற வேண்டியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு, நடுத்தர மக்களும் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடத் தொடங்கியுள்ளனர், இது மருத்துவர்களின் பணிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சிக்கிய 2 பக்க கடிதம்... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலையில் திடீர் ட்விஸ்ட்... 7 பேர் மீது அதிரடி நடவடிக்கை..!
இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரை சேர்ந்தவர் திவ்யா. இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். டிபி சத்திரம் பகுதியில் அரை எடுத்து தங்கி படித்து வந்த திவ்யா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக திவ்யா அடிக்கடி கூறி வந்ததாக அவரது பெற்றோர் கூறியதாக தெரிகிறது. தனது மகள் பனிச்சுமையின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என திவ்யாவின் தந்தை கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எம்பிபிஎஸ் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பேராசிரியரின் குரூர புத்தி! தட்டி கேட்காத கல்லூரி.. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!