தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான மோந்தா புயலானது தற்பொழுது தீவிர புயலாக வலுபெற்றிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்திருக்கிறார்.
மோந்தா புயலானது இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில முன்னதாகவே இந்த மோந்தா தீவிர புயலாக வலுபெற்றிருக்கிறது. புயலுக்கும் தீவிர புயலுக்கும் உள்ள வித்தியாசம் புயலை காட்டிலும் தீவிர புயல் சமயத்தில் அதிக காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்படும். அதையே நிபுணர்கள் தீவிர புயல் என அழைக்கிறார்கள். தற்போது மோந்தா புயலுடைய கண் பகுதியை தற்பொழுது அந்த கரையை கடக்க தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் ஆந்திர பிரதேசம், ஒடிசாவை ஒட்டி இருக்கக்கூடிய மாநிலங்களில் மழை பெய்யும் பொழுது அதீத காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த தீவிர புயலானது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் காக்கிநாடாவைச் சுற்றி இருக்கக்கூடிய மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர பிரதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையல், தற்போது தீவிர புயல் கரையை கடக்கும் போது 110 கிலோமீட்டர் வேகத்தில காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவை நெருங்கும் ஆபத்து... பேயாட்டம் போடும் மோந்தா புயல்... 70 ரயில்கள் ரத்து...!
மோந்தா புயலானது தற்பொழுது தீவிர புயலாக வலுப்பெற்றிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகடலோரம் ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் புயல் தீவிர புயலாக வழுபெற்று கரையை கடக்கக்கூடிய நேரம் வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோந்தா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்ற போதும், தமிழகத்தில் எங்குமே அதிகனமாலைக்கான எச்சரிக்கை விடப்படவில்லை. ஏனெனில் மோந்தா புயலானது ஏற்கனவே தமிழகத்தை விட்டு விலகிச் சென்றுவிட்டதால், மழைக்கான பாதிப்பு என்பது சற்றே குறைவாகத்தான் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
தீவிர புயலாக வலுவடைந்த மோந்தா புயலானது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள்ளாக கரையைக் கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மிரட்டும் மோந்தா புயல்... தமிழகத்தில் இந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!