நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான மோந்தா புயலானது தற்பொழுது 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதில் கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம், இன்று அதிகாலை வந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தை விட்டு சற்றே விலகி சென்றிருக்கிறது மோந்தா புயல். சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புயலானது தமிழகத்தை விட்டும் சென்னையை விட்டும் சற்றே விலகி, ஆந்திரா கடற்கரை ஒடிசா கடற்கரையை நோக்கி தற்பொழுது மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே இந்த புயல் கரையே கடக்கும் என கூறப்பட்டிருந்த மசூலிப்பட்டினத்திலிருந்து சுமார் 230 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசா கோபால்பூரிலிருந்து 570 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த மோந்தா புயலானது மையம் கொண்டிருக்கிறது. இன்று காலை புயலானது தீவிர புயலாக வலுபெற்று, வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் காக்கிநாடாவைச் சுற்றி இருக்கக்கூடிய மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர பிரதேசம் ஒடிசாவை ஒட்டி கரையை கடக்கும் என கூறப்பட்டிருக்கிறது.
அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும் 110 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இப்ப புயலாக இருக்கக்கூடிய மோந்தா, தீவிர புயலாக வலுபெறக்கூடிய நிலையில் முன்பகுதி கரையை கடக்க தொடங்கும். அப்பொழுது ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரக்கூடிய நிலையி; காற்று வேகம் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: High Alert... ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த “மோந்தா” புயல்.... கதிகலங்கும் கடலோர மாவட்டங்கள்...!
தமிழகத்தை விட்டு இந்த சற்று விலகி சென்றிருப்பதால், தமிழகத்திலும் மழை படிப்படியாக குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு அதிகபட்சமாக கனமழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும், ஏற்கனவே இன்றைய தினம் திருவள்ளூருக்கு மட்டுமே மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தை விட்டு சற்றே மோந்தா புயல் விலகிச் சென்றிருப்பதன் காரணமாக மழையுடைய அளவு தமிழகத்தில் சற்று குறைவாகவே பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல தமிழகத்தில்இன்றைய தினம் சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர் ஆகிய வட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பரவலாக நேற்று இரவு முதல் மழை பெய்து வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மழையின் அளவை பொறுத்து, பள்ளியுடைய தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கலாம் என பிற மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் மழை தீவிரமடையும்... நெருங்கும் புயல்! வானிலை மையம் எச்சரிக்கை...!