தூத்துக்குடி மாவட்டம் மந்திதோப்பு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் எலிசபெத் ராணி என்ற தம்பதியினருக்கு கடந்த 27 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னதாக பிரசவத்திற்கு எலிசபெத் ராணி கோவிலை பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளார்.
அங்கு அறுவை சிகிச்சை மூலம் எலிசபெத் ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எலிசபெத் ராணி, இரவு கழிப்பறைக்கு சென்றபோது வழுக்கு விழுந்துள்ளார்.

வெகு நேரம் ஆகியும் எலிசபெத் ராணி படுக்கையறைக்கு திரும்பாததால், பதறிப் போன எலிசபெத் ராணி என் தாய் ஜெயாவதி அவரை தேடி கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது எலிசபெத் ராணி சுயநினைவு இல்லாமல் கடந்ததை கண்டு தாய் ஜெயாவதி அலறி துடித்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் முடிந்த 18 நாளில் லண்டன் பிறந்த கணவர்.. நிற்கதியாய் ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி..
சத்தம் கேட்டு வந்தவர்கள் எலிசபெத் ராணி மீட்டு படுக்கைக்கு கொண்டு வந்தனர். அப்போது எலிசபெத் ராணி பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பெண்ணின் திடீர் மரணம் குறித்து சந்தேகம் எழுவதாக உறவினர்கள் குரல் எழுப்பிய நிலையில்,

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக குழந்தை பிறந்து பத்து நாளில் தாய் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம்.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!