2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வந்தால் தான் நாட்டிற்கு பாதுகாப்பு என்பதால் நிபந்தனை இன்றி ஆதரவு தெரிவித்ததாகவும் தற்போது தாங்கள் nda கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன் கூறினால் தங்களுக்கும் நன்றாக இருக்கும் என்று டிடிவி தினகரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் டிடிவி தினகரன் கூறிய விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் தங்களோடு கூட்டணியில் இருந்து இன்றுவரை தங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அவர் அங்கம் வகிக்கிறார் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்கள் விளங்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளது பாஜக கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் டிடிவி தினகரனின் முடிவை வரவேற்றுள்ளன. டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை சுட்டிக்காட்டி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அதிமுக கூட்டணி சிதைந்து வருவதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: சம்பாதித்ததை காப்போம்... சம்மந்தியை மீட்போம்! இபிஎஸ்ஐ கலாய்த்த சேகர்பாபு
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பொய்களை பேசி வருவதால் கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக விலகுவதாக கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி சிதறி வருவதாகவும் அமைச்சர் கூறினார். எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை பொய் என்பதை புரிந்து கொண்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழினம் இரும்பு பயன்படுத்திய வரலாறு! மூடி மறைக்க பாஜக முயல்வதாக அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு