இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த நாளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

அந்த வகையில் மே 18ஆம் தேதியான இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வெற்றிக்கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தவெக +தேமுதிக +பாமக மெகா கூட்டணி? விஜயின் தேர்தல் கணக்கு..!

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6:00 மணிக்கு உயிரிழந்த ஈழ தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது. மாவட்டச் செயலாளர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பேச்சளவில் தான் சிறுபான்மையினர் பிரச்சனையா? நம்பிய மக்களுக்கு இதுதான் நிலைமையா? திமுகவை சுளுக்கெடுத்த விஜய்..!.