தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் ‘தேனிசைத் தென்றல்’ என அன்போடு அழைக்கப்பட்டவருமான தேவா இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நுங்கம்பாக்கம் தியாகராயநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரும் நேரில் சென்று தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தேவா இசையில் ஷோபா சந்திரசேகர் பல பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘தேவா வர தேவா’, ‘தொட்டபெட்டா’, ‘ஊர்மிளா’ உள்ளிட்ட பாடல்கள் அவருடைய குரலில் ஒலித்தவை.
நீண்ட கால நட்பும் இசைத் தொடர்பும் இருந்ததால் அவரது மறைவு ஷோபாவுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.முதலமைச்சர் விஜயும் இதற்கு முன்பே தேவாவின் இல்லத்திற்குச் சென்று மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தேவாவின் மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். தேவாவின் மறைவு தமிழ் இசை உலகிற்குப் பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதை..! இசை மன்னனுக்கு அங்கீகாரம்..! தமிழக அரசு அறிவிப்பு..!!
கானா இசையைத் திரையுலகில் பிரபலப்படுத்தி, ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துப் பெரும் வெற்றியைப் பெற்றவர் தேவா. நானூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்த அவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன. திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேவாவின் இசைப் பயணமும் எளிய மக்களின் மனதைக் கவர்ந்த கானா பாடல்களும் தமிழ் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும்.
இதையும் படிங்க: "அவருக்காக"..! தேனிசை தென்றல்" தேவா மறைவு...! ஸ்டாலின், உதயநிதி, திருச்சி சிவா நேரில் அஞ்சலி..!