பெரியகுளம் அருகே பெருமாள் கோயில் இருக்கும் மலைப்பகுதியில் உள்ள தர்காவில் அசைவம் சமைப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கைது. மோதல் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் பழமையான பெருமாள் கோவில் ஒன்று உள்ளது, இக்கோவிலுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவில் இஸ்லாமிய மக்களின் பாபா தர்கா உள்ளது.
இந்த பாபா தர்காவில் இன்று இஸ்லாமியர்கள் தொழுகையில் தடத்தி கறி விருந்து நடத்தவிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து இந்து அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பெருமாள் கோவில் இருக்கும் மலையில் அசைவ உணவு சமைக்க கூடாது என கூறி தாமரைக்குளம் வ உ சி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு 23 நிபந்தனைகளை விதித்த திருச்சி காவல்துறை... என்னென்ன தெரியுமா?
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கோவில் மற்றும் தர்கா இருக்கும் மலைக்கு செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினர் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே மலைப்பகுதியில் இருக்கும் தர்காவில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் சைவ உணவு தயார் செய்து அங்கு தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
போராட்டம் காரணமாக அப்பகுதி மாகவும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் மோதல் நடைபெறாமல் இருக்க பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஏறாளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ச்சீ... தமிழ் பேராசிரியர் செய்யுற காரியமா இது?... ஆசைக்கு இணங்கும் படி மாணவிகளிடம் செல்போனில் ஆபாச பேச்சு...!