தமிழக அரசியல் களத்தில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் விலகியது. இந்த விலகலுக்கு முக்கிய காரணமாக பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளை டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூலை மாத இறுதியில், ஓ.பன்னீர்செல்வம் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது விலகலுக்கு காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முடியாத விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் அளித்த பதிலை அவர் குறிப்பிட்டார். தூத்துக்குடி விழாவிற்கு பிரதமர் வந்தபோது ஓ.பி.எஸ். அழைக்கப்படாதது போன்ற சம்பவங்கள், அவரது அதிருப்தியை அதிகரித்தன. இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனும் அமமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.

மானாமதுரை மற்றும் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தினகரன், நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை. அவருக்கு கூட்டணி கட்சிகளை சரியாக கையாளத் தெரியவில்லை. ஓ.பி.எஸ். விஷயத்தில் அவர் ஆணவத்துடன் பொய் சொன்னார் என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார். நயினார் நாகேந்திரனின் அரசியல் அணுகுமுறை இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. அவருக்கு கூட்டணியை அரவணைத்துச் செல்ல தெரியவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: Election முடிஞ்சதும் தெரியும் யார் ICU-ல இருக்காங்க-னு..! உதயநிதிக்கு நயினார் பதிலடி..!
இந்த நிலையில், தான் ஓ. பன்னீர் செல்வத்திடம் தொலைபேசி வாயிலாக பேசியதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் இடமும் பேச தயார் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: “ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா” - அண்ணாமலைக்கு சப்போர்ட் செய்த நயினார் நாகேந்திரன்... திமுக உ.பி.க்கள் கதறல்...!