முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர் இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மேலும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்து கிடந்ததை, நியாபகப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே என்றும்காலையுணவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை எனவும் கூறினார். பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது விடியா அரசின் விழிகளுக்குப் புலனாகவில்லையா என்றும்ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திராவிட மாடலின் சாதனையா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ஆசிரியர்களால் பாலியல் தொல்லை! அப்பா ஸ்டாலின் இது தான் பள்ளிக் கல்வித்துறை பொற்காலமா? - நயினார்
உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா அல்லது, போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷாவால் கன்பியூஸ் ஆன அதிமுக... ஒரே மேடையில் மாத்தி, மாத்தி பேசிய மாஜி அமைச்சர்கள் - கடைசியில் நயினார் சொன்ன ட்விஸ்ட்...!