கடந்த தேர்தல்களில் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு இணைந்து போட்டியிடாது என்றும் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
NDA கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நயினார் நாகேந்திரன் மீது கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நயினார் நாகேந்திரன் சிறிய கட்சி என அழைப்பதாகவும் கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

அதிமுக அணிகளை இணைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் யாரையும் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இன்னைக்கு ஆசிரியர் தினம்! அந்த வாக்குறுதி ஞாபகம் இருக்கா முதல்வரே? வாட்டி எடுத்த நயினார்
டிடிவி தினகரன் என் டி ஏ கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பான கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தார். டிடிவி தினகரன் கூறுவதைப் போல் நாங்கள் யாரையும் குறை கூறவில்லை என்றும் அதற்கான நபர்களும் தாங்கள் அல்ல எனவும் தெரிவித்தார். திமுகவை வெல்ல ஒன்றிணைவது அவசியம் என்பதை தான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன் என தெரிவித்தார். திமுகவை வெல்ல அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றார். கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது உட்கட்சி விவகாரம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஒத்துமையா இருந்தா திமுகவை வீட்டுக்கு அனுப்பிடலாம்! செங்கோட்டையன் பேச்சை ஆமோதித்த நயினார்…