கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமி நேற்று மாலை திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இயற்கை உபாதைக்காக சென்ற சில பெண்கள் அருகிலிருந்த புதர்ப் பகுதியில் காயங்களுடன் கிடந்த சிறுமியை கண்டுபிடித்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிபின் மஞ்சி என்பவரை கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஈரக்குலையே நடுங்குது.! கொஞ்சி, கெஞ்சி ஓட்டு கேட்டீங்களே விஜய்..? வேடிக்கை பார்ப்பது கேவலத்தின் உச்சம்... நயினார் தாக்கு.!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது அராஜகம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று வரை சிரித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இன்று தங்கள் கண்முன்னே பிணமாகக் கிடப்பதை அக்குழந்தையின் குடும்பத்தாராலும் உறவினர்களாலும் தாங்கிக் கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இன்று இக்குழந்தைக்கு நடந்த கொடூரம் நாளை நமது பிள்ளைக்கும் நடந்து விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களை நிம்மதியாக இருக்க விடுமா? தங்களின் கோபத்தையும் அச்சத்தையும் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தக் கூட தவெக ஆட்சியில் மக்களுக்கு உரிமையில்லையா? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்வது அப்பட்டமான பாசிசப் போக்கு என்றும் கூறியுள்ளார் ஐயனார் நாகேந்திரன், கடந்த 48 மணி நேரத்தில் 20 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!