திராவிட முன்னேற்றக் கழகம் 2021 முதல் தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி, ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று அழைக்கப்படுகிறது, இது சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறப்படுகிறது. திமுக ஆட்சி ‘நல்லாட்சி’ என்று கூறப்பட்ட வருகிறது. மக்கள் நலத் திட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம், மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவம் ஆகியவற்றால் நல்லாட்சி என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நல்லாட்சி, பொற்கால ஆட்சி என்று திமுக அரசை கூறிக் கொள்வதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் தரவரிசையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வராத நிலையில், வருடாவருடம் தூய்மைப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது எனவும் தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா எனவும் அவர் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுடுகாட்டில் அந்த மாதிரி.. மஞ்ச காட்டு மைனாவுடன் வசமாக சிக்கிய பிரபல கட்சி நிர்வாகி..!
தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள், குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள், பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், அவற்றைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் என திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையான நிகழ்வு என நயினார் நாகேந்திரன் சாடினார்.
இப்படி குப்பைக்காடாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு திமுகவின் தலைவர்கள் கூனிக்குறுக வேண்டும் என்று குற்றம்சாட்டினார். குப்பைகளைப் பெருகவிட்டு, நோய்களின் கூடாரமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு மேடைதோறும் பொற்கால ஆட்சி என வெற்றுப் பெருமை பேச திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: முருக பக்தர்களாக வந்த நீங்கள் வீரபாகுவாக செல்ல வேண்டும்.. அண்ணாமலை ஃபயர் ஸ்பீச்..!