தமிழகத்தில் அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதற்கு முதன்மையான எதிர்ப்பு, இது அரசு நிதியை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாகக் கருதப்படுவதே. எடுத்துக்காட்டாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் திமுக ஆட்சியில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” அல்லது “மு.க. ஸ்டாலின் காப்பீட்டுத் திட்டம்” போன்ற பெயர்கள், போன்றவை அரசியல் நோக்கம் கொண்டவை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அரசு திட்டங்களில் கட்சி தலைவர் படம் முன்னாள் முதல்வர் படத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என அதிமுக எம் பி சி வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களை முதல்வரின் பெயர் இடம்பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுகவிற்கு மரண அடி இருக்கு... சட்டம் ஒழுங்கு பிரச்சனை விவகாரத்தில் கொந்தளித்த அன்புமணி

அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சி.வி. சண்முகம் அவர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம் ஸ்டாலின் என்று தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்குதானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணரவேண்டும் என்று கூறினார்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி நீக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இனிமே " உங்களுடன் பொம்மை" என பெயர் மாத்திக்கோங்க! நக்கலடித்த அதிமுக