இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள, செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன் என கூறினார்.

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் திமுக அரசு கண்டுபிடிக்காத நிலையில் கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையையும் நமக்கு உணர்த்துகிறது என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!

எனவே, தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைக் குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால், இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்வதுடன், சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டுமென முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியை நாரடித்த ஆம் ஆத்மி..! ஒரு அடி கூட அழுக்கா இருக்க கூடாது.. பிஜேபி ரேகா குப்தா அதிரடி..!