திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சண்முகவேல்., வழக்கம் போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ் ஐ சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: களமாட காத்திருக்கும் பாஜக.. நயினாரின் சூறாவளி சுற்றுப்பயணம்! பாஜக தொண்டர்கள் செம குஷி..!
மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எஸ் ஐ கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருப்பூரில் எஸ்.ஐ சண்முகவேல் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
சட்டம் ஒழுங்கு குறித்து ரிவ்யூ கூட்டம் நடத்தக்கூட முதலமைச்சர் ஸ்டாலின் தயாராக இல்லை என அவர் விமர்சித்தார். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்று தெரிவித்த அவர், மோசமான ஆட்சியாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் காவல் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்குள் இணைக்க திட்டமா? - சற்றும் யோசிக்காமல் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்...!