நாமக்கல்லில் மின்கம்பி மீது கிரேன் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடக்கும் நிலையில் மின்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். சுகுமார் மற்றும் ஜோதி ஆகிய இருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணி நடந்து வந்துள்ளது. ராட்சத கிரேன் உதவியுடன் அடுக்குமாடி கட்டடத்தில் பத்து நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மருத்துவமனையில் முகப்பு பகுதியில் நான்காவது மாடியில் வர்ணம் அடிப்பதற்காக ராட்சத கிரேன் மூலம் ஜோதி, சுகுமார் மற்றும் முகேசன் ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது மாடியை எட்டிய போது, எதிர்பாராத விதமாக மின் கம்பி மீது கிரேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 60 அடி உயரத்திலிருந்து மூவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் துரதிஷ்டவசமாக ஜோதி, சுகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: திரும்பும் திசையெல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்..!! நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தம்..!

மேலும், படுகாயம் அடைந்த முகேசன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மின் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மின்கம்பி மீது கிரேன் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாமக்கல்லில் துயரம்! கழுத்தை நெரித்த கடன்... தவணை கட்ட முடியாமல் தவித்த தந்தை எடுத்த விபரீத முடிவு..!