நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பம்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகிய நிலையில், நான்கு குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன் நேற்று இரவு உணவு உண்ட பின் மனைவியை தனது ஆண் குழந்தையுடன் படுக்கை அறையில் உறங்க சென்றதாகவும், கோவிந்தராஜ் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.
திடீரென்று அதிகாலை மூன்று மணி அளவில் கோவிந்தராஜ் தனது மனைவி உறங்கி கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டு, ஹாலில் படுத்திருந்த மூன்று பெண் குழந்தைகள் பிரதிஷா, ஸ்ரீ ரிதிகா ஸ்ரீ, தேவஸ்ரீ ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: கிட்னி திருட்டு இல்ல! முறைகேடு.. அதிமுக ஆட்சியில் நடக்கலையா? அமைச்சர் மா.சு கேள்வி..!

பின்னர் அவரும் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பாரதி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். பிறகு மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சமூக இடத்திற்கு வந்த போல சார் சடலங்கலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கோவிந்தராஜ் எதற்காக குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக விசாரித்து வந்தனர்.
மனைவியிடம், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஏற்கனவே கோவிந்தராஜ் சொல்லி உள்ளதாக தெரிகிறது. இந்த கொடூர செயலை செய்யும் முன் கோவிந்தராஜ் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கிட்னி விற்பனை: நாளை நேரில் வருகிறது மத்திய சுகாதாரத்துறை குழு..!!
கோவிந்த ராஜ் 20 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும், அதற்கான தவணையை கட்ட முடியாமல் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு மாதம் 48 ஆயிரம் ரூபாய் தவணை கட்ட வேண்டி இருந்ததாகவும் தெரிகிறது.
கூலி வேலை செய்து வந்த கோவிந்தராஜ் கடன் தவணையை கட்ட முடியாமல் மிகவும் தவித்து வந்த நிலையில், கொடுத்தவர்கள் மிகவும் நெருக்கியதாகவும், எனவே, மது போதையில் தனது பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.