கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கழிப்பிடத்தில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் இருந்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டதை எடுத்து கழிப்பிடத்தில் இருந்த அரசியல் கட்சியின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர் மற்றுன் முதலமைச்சர் பெயர்களை நீக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் கேட்டபோது, அந்த தலைவர்களின் பெயர் கடந்த 2010ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அந்த பகுதி அண்ணாநகர் என்பதனால் முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களுடைய பெயர்களை கழிப்பிடத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை.. கைநிறைய சம்பளம்.. சதுரங்கவேட்டை பட பாணியில் மோசடி.. விருந்து கொடுத்தவர் சிக்கினார்..!

இதுபோன்ற இடத்தில் தலைவர்கள் பெயர்களை பயன்படுத்தக் கூடாதுன்னு என அந்த பகுதி மக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தற்போது அந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது பெயர்கள் மட்டும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஒட்டுமொத்தமாக கழிப்பிடம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு அந்த பெயர்கள் அனைத்தும் நீக்கப்படும் என அறிவித்துள்ளனர். இருப்பினும், பொதுக்கழிப்பிடத்தில் தலைவர்கள் பெயரை எழுதியது சோசியல் மீடியாக்களில் சரமாரியான கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதலே அந்த கழிப்பிடத்தில் தலைவர்கள் பெயர் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. எப்போது கழிப்பிடத்தை புதுப்பித்தாலும், வண்ணம் அடித்தாலும் மீண்டும், மீண்டும் அதே இடத்தில் தலைவர்கள் பெயர் எழுதப்பட்டு வந்துள்ளன. இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தற்போது மாநகராட்சி நிர்வாகம் அந்த பெயர்களை தற்காலிகமாக வண்ணம் பூசி அழித்துள்ளது.
இதையும் படிங்க: கோவை மாணவி விவகாரம்; பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் மீது பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்!