நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பிளஸ் டூ மாணவன் நல்லமுத்து மயங்கி விழுந்து உயிரிழப்பு. பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் உயிர் பிரிந்த சோகம். கூடங்குளம் போலீசார் விசாரணை.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள சங்கநேரியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துரை. இவரது மகன் நல்லமுத்து (வயது 17). இவர் ராதாபுரம் அரசு மேல் நிலையில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் ஊருக்கு அரசு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சங்கநேரியில் பேருந்து விட்டு இறங்கிய மாணவன் நல்லமுத்து திடீரென்று மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடங்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: வண்டை விழுங்கிய குழந்தை.. மூச்சுக்குழாயில் கடித்ததால் பறிபோன உயிர்.. திருவள்ளூரில் சோகம்..!!
அங்க பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக கூறினார். இச்சம்பவம் தொடர்பாக கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவன் திடீரென்று இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தப்பித் தவறிக்கூட இங்கு யாரும் சாகக்கூடாது... விசித்திரமான நகரம் எங்க இருக்கு தெரியுமா?