திருநெல்வேலி மணிப்புரம் பகுதியில் ஏற்பட்ட கைக்கலப்பில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் டால்டன் அவரது மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மணிப்புரம் பகுதியில் டால்டன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அப்பகுதியில் பெட்ரோல் பங்கு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டால்டன் வீட்டி அருகே ஏற்பட்ட கைக்கலப்பில் திடீரென மர்ம நபர்கள் சிலர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகிய இருவருக்கும் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
இருவரும் உயிரிழந்த தகவல் அறிந்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் தலைமையில் ஏராளமான போலீசார் மணிப்புரம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இரட்டை கொலை சம்பவத்தால் மணிப்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? முன் விரோதம் காரணமா என்பது குறித்தன போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!
தப்பியோரடிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த பிரச்சனை டால்ன் தரப்பிருக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடப்பிரச்சனை கோவில் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்வேரதம் காரணமாக கத்தி குத்து சம்பவம் நடந்ததா என்ற கோணத்திலும் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓட ஓட வெட்டி வீசிய பயங்கரம்... தமிழகத்தையே மிரள விட்ட இரட்டை கொலையில் அதிரடி உத்தரவு...!