தேனி மாவட்டம் தேக்கப்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வின் எதிரொலியாக நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு இருமடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள சிறைக் காவலர்களையும் பணிக்கு வரவழைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தேனி சிறையில் பணியில் இருந்த சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள சிறை வளாகங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாதுகாப்பு இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறையில் பணியாற்றும் காவலர்கள் விடுமுறையில் இருந்தாலும் அவர்களையும் உடனடியாகப் பணிக்கு வரவழைக்கும் உத்தரவை சிறை நிர்வாகம் பிறப்பித்துள்ளது. சிறை வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் யாரையும் அனுமதிக்காமல் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!
தேனி சிறைத் தப்பியோட்டம் மாநிலத்தின் சிறைப் பாதுகாப்பு முறைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனால் பிற முக்கிய சிறைகளிலும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தப்பியோடிய கைதிகளை விரைவில் பிடிப்பதற்கான தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் பூட்டையே உடைக்காமல் மாயமான 30 சவரன் நகைகள்... போலீசுக்கு வந்த ஒரே ஒரு சந்தேகம்... அம்பலமான அதிர்ச்சி கதை...!