மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த முரசு புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டிருந்தது. இதன் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்திருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், ஏற்கெனவே கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலைகீழாக மாறிய வானிலை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை...!
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுமா அல்லது விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking ருத்ரதாண்டவம் ஆடும் அர்னாப் புயல்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!