அமித் ஷா, மதுரையில் நடந்த பாஜக கூட்டத்தில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து, பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான பதிலளிக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதிமுகவின் கூட்டணி முடிவுகள் தெளிவற்றதாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது, தனிப் பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார்.
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியோருக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்க கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை மறுத்துவிட்டன.

இந்த நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணியில் இணையுமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூறினார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது வரை நாம் தமிழர் கட்சியில் 150 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறிய சீமான், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண் கொடூர கொலை... கையறு நிலையில் குழந்தைகள்! அரசு கரம் கொடுக்க சீமான் வலியுறுத்தல்...
இதையும் படிங்க: திருட்டுப் பய கூட்டத்துக்கிட்ட நாட்ட கொடுத்தா திருடாம என்ன நடக்கும்? கொதித்தெழுந்த சீமான்..!