புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து பரப்பரை மேற்கொள்ள வருகை தந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்: தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. தேர்தல் கேரளா புதுச்சேரி அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் நிறைவடைந்துள்ளது ஆனால் தமிழ்நாடு மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தொகுதி மறுசீரமைப்பை அவசர அவசரமா செய்ய வேண்டிய தேவையே இல்லை. நிதானமா விவாதிச்சு செய்ய வேண்டிய வேலை. எப்பவுமே பிஜேபி இப்படி திட்டமிட்டு ஒவ்வொன்னையும் திருப்பும். திருப்பி CAA, NRC NIA எஸ்ஐஆர் சிறப்பு வாக்காளர் திருத்தம்னு... இந்த மாதிரி வேலைகளை கொண்டு வந்து மக்களை எப்பவுமே ஒரு பதட்டத்துல வச்சுக்கிறது அவங்களுக்கு பழக்கமாயிடுச்சு.
அன்னைக்கு விடுதலை பெற்ற பிறகு 543 நாடாளுமன்றம் கொண்டு வந்தீங்க. அன்னைக்கு இருந்த மக்கள் தொகை இன்னைக்கு இருக்கா? இன்னைக்கு 150 கோடிய தொட்டுருச்சு. அப்படின்னா ஆறு சட்டமன்றத்துக்கு ஒரு நாடாளுமன்றம்னு இருந்தத மாத்தி, மூணு சட்டமன்றத்துக்கு ஒரு நாடாளுமன்றம்னு கொண்டு வந்தாதான் எனக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். அப்படி கொண்டு வரலைல்ல? என்ன சீர்திருத்தம் பண்ண போறீங்கன்னு சொல்லுங்க, மக்கள் தொகை அடிப்படையிலன்னா, குடும்ப கட்டுப்பாட்டை கொண்டு வந்து நம் மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திட்டாங்க.மற்ற மாநிலங்கள்ல உத்தரபிரதேசத்துல அவங்களுக்கு அதிகமா வந்துரும். மக்கள் தொகை எண்ணிக்கைல வந்தா எனக்கு குறைஞ்சிரும். அப்படி வரக்கூடாது?
எடப்பாடியில் தவெக வேட்பாளரை விலைக்கு வாங்குனதுன்னு சொல்றாங்களா? இல்ல அவருக்கு அந்த கட்டுத்தொகை போட்டதுல பிரச்சனையா என்னன்னு நமக்கு தெரியல. ஆனா அது மாற்று வேட்பாளராவது சரியா போட்டுருந்தா அவராவது நின்றுக்கணும். அப்ப ரெண்டு பேரும் வரும்போது சந்தேகமா இருக்கு.
இதையும் படிங்க: விஜய் நேரா எதுக்கு என் தொகுதியில பரப்புரைக்கு வரணும்..? சீமான் கேள்வி..!
தம்பி விஜய் பேசும்போதெல்லாம் எனக்கும் திமுக-க்கும், அதிமுக-க்கும், விசிக-க்கும், ஸ்டாலினா விஜயகாந்தாங்குறாப்ல... ஆனா ஊழல் கட்சி ஒழிக்கணும்ங்கிறாரு, ஆனா எடப்பாடி தொகுதிக்குள்ள போட்டி போடல. அந்த தொகுதிக்கு அவரு போகல. சரி போட்டி போடல, தம்பி உதயநிதி தொகுதிக்கு போகல. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதிக்கு போகல. பாஜக பாசிசம், கொள்கை இது என்ன விஜய் சொல்றாரு அந்த தலைவர்கள் போற எந்த தொகுதிக்கும் போகல. நேரடியா என் தொகுதிக்குதான் வராரு. இப்ப யாருக்கு போட்டியா வந்து இறங்கி வேலை செய்றாருங்கிறத நீங்க பாக்கணும்.
காரைக்குடியில் அவர் பேசாமல் சென்றுள்ளார் அப்படி பேசியிருந்தால் ஒரு பிடல் காஸ்ட்ரோ, மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் மாதிரி பேசிருப்பாரா... பேசிருந்தா தலைகீழா மாத்திட்டு வந்திருப்பாரா. செய்தியாளர் ஒருவர் உங்க மேல இருக்க பாசத்துல பேசாம போயிட்டாரான்னு கேக்குறாரு. அப்ப நான் 'ஆமா'ன்னு தான் சொல்லணும். பேசிருந்தா என்ன பேசிருப்பார்? இதே 2000 தாரேன், 2500 தாரேன்னு... அதுதானே வேற என்ன பேசப்போறாங்க என விஜயை கடுமையாக விமர்சித்தார்.
விவசாயி ஏன் கடனாளியாகுறான்? எனக்கு பதில் சொல்லுங்க எல்லா பயலும். ஏன் கடனாளியாகுறான்? ஒரு தடவ தள்ளுபடி பண்ற, மறுபடி வார, மறுபடி தள்ளுபடி... ஏன் கடனாளியாகுறான்? எத்தனை நாளைக்கு என்னைய கடனாளியா வைப்ப? ஒரு நாட்டுல விவசாயி கடனாளினா அந்த நாடு நாடு இல்ல, சுடுகாடு. பான்பராக், சிகரெட், சுருட்டு, சாராயம் காய்ச்சுறவன், கார், செல்போன்... இவனெல்லாம் இந்த முதலாளி எல்லாம் கோடீஸ்வரனா இருக்கான்.
இது இல்லாமையும் வாழ முடியும், சோறு இல்லாம வாழ முடியாது. அப்ப இவனெல்லாம் கடனாளியாகல, கோடீஸ்வரனா இருக்கான். என் விவசாயி கடனாளியாகுறான்? எத்தனை நாளைக்கு கடனாளியா வைப்ப நீ? இதெல்லாம் வேடிக்கை பண்ணிட்டு இருக்காங்க. கல்வி கடன் தள்ளுபடி... கல்விய கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அத கடன் வாங்கி படிக்கிற நிலைமைல வச்சது யாரு? விவசாய கடன் தள்ளுபடி... விவசாயி கடனாளியாகக்கூடாது. ஏன் கடனாளியாகுறான்? எல்லா பயலும் உற்பத்தி செய்ற பொருளுக்கு அவன் விலைய தீர்மானிக்கிறான். என் ஆத்தா அப்பன் வெளைய வைக்கிற பொருளுக்கு அவன் விலைய தீர்மானிக்க முடியல. வாங்குறவன் தீர்மானிக்கிறான். அதானே? அந்த நிலைய மாத்தணும்ல. நான் சொல்றதுதான் விலைன்னு வரணும். அப்ப வந்தாதான் அவன் வறுமைக்கு போகமாட்டான்.
இந்த திராவிட திமுக, அதிமுக-க்கு இடையில. அந்த வீட்டுல கொஞ்சம் பருப்பு, சாம்பார், இந்த வீட்டுல கொஞ்சம் கூட்டு, பொரியல் வாங்கி ஒரு கூட்டாஞ்சோறு போல திமுக-ல கொஞ்சம், அதிமுக-ல கொஞ்சம். இவர் 2000, விஜய் 2500 என்று அறிவித்துள்ளார்.
என் ஆட்சியில் விவசாயி கடனாளியாக மாட்டான். இதுவரை இருந்த கடன் தள்ளுபடி, தருகிறோம். இனிமேல் ஒரு ரூபாய் கடனாளி என் விவசாயி ஆகமாட்டான்.
கல்விக் கடன் இல்ல, கொடுக்க வேண்டியது அரசின் கடமை இதுவரை பெற்ற கடனை தள்ளுபடி பண்ணு. இனிமேல் சிறந்த கல்வியை நான் என் பிள்ளைக்கு கொடுத்துருவேன். ஒரு ரூபாய் கடன் வாங்கி இனி படிக்க வேண்டிய தேவை இல்லை.
அனைத்து கட்சியும் இலவசங்களை அறிவிச்சிருக்காங்க. இலவசம்ங்கிறது ஏமாத்து. என் ஆத்தா அப்பனை, அண்ணன் தம்பியை ஏமாத்தணும்னு நினைக்கிறாங்க அவங்க. நான் அந்த நிலையிலிருந்து மாத்தணும்னு நினைக்கிறேன். இவங்களுக்கு எப்படியாவது என் இனத்தை ஆளணும்னு வெறி இருக்கு. எனக்கு எல்லா மக்களையும் போல என் இனமும் வாழணும்ங்கிற வெறி இருக்கு. இது ரெண்டுக்கும் கோட்பாடு புரியுதுன்னு நினைக்கிறேன். எங்க அம்மாவும், எங்க அப்பாவும், எங்க சித்தப்பா, பெரியப்பா கையந்துறது எனக்கு தன்மான இழப்பா இருக்கு, கொதிக்கிறேன். அதனால இந்த இலவசத்தை ஒழிக்கிறேன்.
அதிமுக திமுக ஒரே கூட்டணியில இருக்கும்போது பேசி வச்சுதான் எழுதி இருப்பாங்க.
அதுவும் 2000, இவங்களும் 2000, பதிவு முறையில எல்லாமே ஒரே மாதிரி வருது. ஏற்கனவே ஒவ்வொரு பட்ஜெட்டும் பற்றாக்குறைதான். இதுல இந்த இலவசம், 10,000, 8,000, டோக்கன், அது வந்தா தாரேன், இது வந்தா தாரேங்கிறது ஏமாத்துறதுதான்.
நான் மூன்று இலவசமாக தருகிறேன். கட்டணம் இல்லாம தாரேன். சிறந்த கல்வியைத் தாரேன். பின்லாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் மூணையும் மிஞ்சிட்டுப் போயிடுவேன், என் பிள்ளைக்குக் கொடுத்துருவேன். மருத்துவத்தைக் கொடுத்துருவேன். இப்ப முதலமைச்சருக்கு முடியலன்னா அப்போலோ, காவேரிக்குப் போற தரம் இல்ல, அதைத் தாண்டிய தரத்துக்கு நான் கொடுத்துருவேன்,
குடிநீரை கட்டணம் இல்லாம தந்துறேன். நான் ஏசி பஸ் ஓட்டுறேன், ஓசி பஸ் ஓட்டல. உரிய கட்டணத்தைக் கொடுத்துட்டுப் போ. உனக்கு இலவசமா கொடுத்தா பொருளின் மதிப்பு தெரியாது. தடையற்ற மின்சாரம் கொடுக்கிறேன். நான் கட்டணம் இல்லாம கொடுத்தா என் ஆத்தா அப்பன் வீட்டுல விளக்கு அணைக்காம வெளிய போவான்னு நினைக்கிறேன்.
போராடிப் பெறாத, உழைத்துப் பெறாத பொருளுக்கு மதிப்பு கிடையாது. ஒரு தலைவன் வந்து நாட்டை அப்படி கட்டமைக்கக் கூடாது.
இப்ப இலவசம்ங்கிறது ஏமாற்று அந்த நிலையிலிருந்து மாற்று. அதுதான் என்னோட கோட்பாடு.
பாஜகவுக்கு படிப்பறிவு இருந்து என்ன பண்ணினார்கள்? மதத்தை முன்னிறுத்தி உலகத்துல எவனாவது அரசியல் செய்வானா? இது படிச்சவன் செய்யுறதா? செய்வானா? மதம் அரசாளலாமா? மதம், மதம் அரசியலாகி அதிகாரத்துக்கு வந்தா அங்க மனிதநேயம்னு ஒன்று செத்தே போயிரும். இது படிச்சவன் செய்யுற செயலா? இறை மாதிரி இந்த ஆட்சி செய்யணும். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்'னு என்னுடைய வேதம் சொல்லுது. இறைவன் கேட்கிற உயிருக்கும், கேட்கத் திறனற்ற உயிருக்கும், புல்லு பூண்டு, நாய் நரி எல்லாவற்றுக்கும் வேண்டியதைக் கொடுப்பான்ங்கிறதுதான் இறைவன். அப்படி ஆட்சி செய்யணும். அவன்தான் தலைவன்.
அதைவிட்டுபுட்டு நீ இந்த மதத்துக்குத்தான் நாடு, இந்த மதத்துக்குத்தான் செய்வேன்னா... இது படிச்சவன் செய்யுற செயலா? படிச்சு என்ன பண்ணீங்க? இவன் செய்யுறதும் அதையேதான் சொல்லுவீங்க. மறுசீரமைப்பு செய், தேர்தல் முடிஞ்சவுடனே செய். செய். எஸ்.ஐ.ஆர் (SIR) ஏங்க கொண்டு வந்தீங்க? அதில் காரணம் என்ன? சீர்திருத்தம். இறந்தவர்கள் வாக்கு அதுல இருக்கு. இறந்தவர்கள் சான்றிதழை சமர்ப்பிச்சிருக்காங்க, ஒப்படைச்சிருக்காங்க. அதுல இருக்கிறவனை எடுத்து, ஒரு நிலத்துல பயிர் இருக்குன்னா களையை மட்டும்தானே எடுக்கணும்? அவன்தானே விவசாயி? மொத்தமா அழிச்சுட்டு மறுபடியும் நடுவோம்னா இது எப்படிப்பட்ட செயல்? இது படிச்சவன் செய்யுற செயலா? எஸ்.ஐ.ஆர் ஏன் கொண்டு வந்தார்கள்.
ஒரு தலை காதலாக 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டை காதலிக்கிறீர்கள் உங்களது காதல் எப்போது வெற்றியடையும் என்று கேட்ட கேள்விக்கு காதல்னா என்னையே காதலிக்கிற கூட்டம் இருக்குல? 36 லட்சம் பேர் காதலிச்சு மூணாவது பெரிய கட்சியாக்கி, அங்கீகாரம் கொடுத்து இருக்காங்க... முதல்ல என் சின்னம் எங்க இருக்குன்னு தெரியாது. முதல் பெட்டியில முதல் இடத்துல இருக்குது இல்ல? ஏன் இருக்கு? ஏன்னா இந்த நாட்டுல நம்பர் ஒன்னா, முதல் இடத்துல இருக்கிறது விவசாயிதான்ங்கிறசின்னம் உணர்த்துது.
நான் காரைக்குடிக்காரன் அல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்குடிக்காரன். ஒவ்வொருத்தரும் 200, 234 என விளக்கு வைத்துள்ளனர் என்னுடைய இலக்கு 550 என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!