தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் என்பது பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக பல ஆண்டுகளாக இயங்கி வரும் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் சமையலர், உதவியாளர், அமைப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் தினசரி பள்ளிகளில் சென்று உணவு தயாரித்து வழங்கும் பணியைச் செய்து வருகின்றனர்.
ஆனால் இவர்களின் பணி நிலை மற்றும் ஊதியம் பல ஆண்டுகளாகவே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஒரு தெளிவான வாக்குறுதியை அளித்திருந்தது. அதாவது, தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களையும் அங்கன்வாடி ஊழியர்களையும் அரசுப் பணியாளர்களாக நியமித்து, காலமுறை ஊதியம் அடிப்படையில் நிரந்தர ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதோடு கூடவே, அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் போன்ற பாதுகாப்புகளும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த வாக்குறுதி அப்போது சத்துணவு ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, ஏனெனில் பலர் 30-40 ஆண்டுகளாக தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வந்தனர்.ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அரசு பல துறைகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், இந்த குறிப்பிட்ட வாக்குறுதி தொடர்பாக இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றே கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: எச்சரிக்கை..! அல்மாண்ட் கிட் சிரப் வாங்க கூடாது… தமிழக அரசு அதிரடி தடை..!
இந்த நிலையில், நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். நான்கு ஐந்து ஆண்டு காலமாக தங்களுக்காக எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என சத்துணவு ஊழியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர், காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் சத்துணவு ஊழியர்கள் வலையுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: FREE LAPTOP...! அந்த லிங்கை மட்டும் தொடாதீங்க..! தமிழக அரசு கடும் எச்சரிக்கை..!