தமிழக அரசு தற்போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் செயல்படுத்தி வருகிறது. "உலகம் உங்கள் கையில்" என்ற பெயரில் இந்தத் திட்டம் 2025-26 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 5 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இதன் தொடக்க விழாவை நடத்தி, முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை வழங்கத் தொடங்கினார்.
மொத்தத்தில் இரண்டு கட்டங்களாக 20 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவசமாக மடிக்கணினிகள் கொடுக்கப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை மையமாகக் கொண்டது.

டிஜிட்டல் திறன் வளர்ச்சி, ஆன்லைன் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தயார்நிலை ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இத்தகைய பின்னணியில், சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் சிலர் "தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்" என்று ஒரு லிங்கைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு இதுபோன்ற தகவல்களை மிகத் தெளிவாக மறுத்துள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்... இலவச லேப்டாப் எப்போது கிடைக்கும்?... வெளியானது முக்கிய அறிவிப்பு...!
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம், இலவச மடிக்கணினி திட்டத்திற்கு எந்த ஆன்லைன் விண்ணப்ப முறையும் இல்லை என்று கூறியது. அரசு எந்த இணையதளம் அல்லது டிஜிட்டல் போர்ட்டலில் விண்ணப்பிக்கச் சொல்லவில்லை என்றும், அத்தகைய லிங்குகள் போலியானவை என்றும் எச்சரித்தது. இதேபோல், தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் பிரிவும் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலயா.. நாளைக்கும் இருக்கு..!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!