தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதிமுக பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெற்றதன் காரணமாக தென் மாவட்டங்களில் பாஜகவுக்கும் செல்வாக்கு அதிகரித்தது.

இதன் காரணமாக மதுரை, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக 2வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்பின் பாமக தலைவர் அன்புமணி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு குல்லா! 210 தொகுதி நம்ப பக்கம் தான்… இபிஎஸ் ஃபயர் ஸ்பீச்!

தொடர்ந்து செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.

இது அவரது ஆதரவாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் ஆதரித்து வரும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், யாருக்கு ஆதரவாக அல்லது யாருக்கு எதிராக மக்களை சந்திப்பார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: துண்டுசீட்டு இப்போது தொலைந்து விட்டதா? மு.க.ஸ்டாலினை கடுமையாக விளாசிய எடப்பாடி பழனிசாமி!!