உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்திநகர் ஜிஎஸ்டி சாலையில் தனியார் ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அடுத்த திசையன்விளையிலிருந்து சென்னைக்கு 43 பயணிகளோடு ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்திநகர் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது பேருந்தில் தீ பற்றியது.
ஏரல் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது, ஏர் பிரேக் சிஸ்டம் உள்ள பகுதியில் புகை வருவதைக் கண்டறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பேருந்திலிருந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கிவிட்ட நிலையில், தனியார் பேருந்து முழுவதும் வேகமாக தீ பற்றி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!
உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக முற்றிலும் எரிந்த பேருந்தானது எலும்பு கூடாக மாறியது. இதனால் அப்பகுதியில் சில மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!