• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கினால் 251 சமுதாயத்தினரைத் திரட்டிப் போராடுவோம் என ஓபிசி மக்கள் உரிமை கட்சித் தலைவர் இரத்தினசபாபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 16 Jun 2026 17:18:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OBC Party Chief Rathinasabapathy Warns TVK Govt Against Providing Exclusive Quota for Vanniyars.

    பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான சர்வ சமுதாயக் கூட்டம் அரசியல் லாபத்திற்கான ஒரு நாடகம் என்று ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சியின் தலைவர் இரத்தினசபாபதி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், புதிய அரசு அமைந்தவுடன் பாமக தனது அரசியல் முக்கியத்துவத்தை நிலைநாட்டவே இந்த கூட்டத்தைக் கூட்டியதாகத் தெரிவித்தார். மேலும், வன்னியர்களுக்கான 10.5% தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றம் சென்ற பெரும்பாலான சமுதாய அமைப்புகள் இந்த கூட்டத்தில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    ஓபிசி கட்சி

    செய்தியாளர் சந்திப்பில் தவெக அரசு மற்றும் பாமக இடையேயான நகர்வுகள் குறித்துப் பேசிய இரத்தினசபாபதி, "தவெக-வின் மூத்த அமைச்சர் ஒருவர் வன்னியர் தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போதைய அரசியல் சூழலில் தவெக அரசுக்குச் சில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில், எதிர்காலக் கூட்டணியைக் கருத்தில் கொண்டு இந்த நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வன்னியர் தனி இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடும் அபாயம் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் வன்னியர் தனி இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்த பிறகும், அவர்கள் முதலமைச்சரைத் தவறான வழியில் நடத்தி வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: "தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!

    தமிழ்நாட்டில் மொத்தம் 252 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் உள்ள நிலையில், ஒரே ஒரு சமூகத்திற்காக மட்டும் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருவதை ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி கண்டித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களைப் போலத் தமிழ்நாட்டிலும் மாநில அரசே முறையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று இரத்தினசபாபதி வலியுறுத்தினார். அதன் மூலம், எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் அரசு வேலைகளில் இருக்கிறார்கள், எத்தனை பேர் பட்டதாரிகளாகவும் தொழில்முனைவோராகவும் இருக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வத் தரவுகளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் உண்மையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    ஓபிசி கட்சி

    தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு சமூகத்திற்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், மாநிலத்தில் உள்ள மற்ற 251 சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தீவிரமான போராட்டச் செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என்று இரத்தினசபாபதி எச்சரித்தார். இது குறித்துத் தவெக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமாரிடம் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் வருமான வரம்பை மத்திய அரசின் விதிமுறைகளின்படி 2.5 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    மேலும் படிங்க
    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    சினிமா
    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது!  சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    அரசியல்
    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    அரசியல்

    செய்திகள்

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது!  சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    அரசியல்
    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    அரசியல்
    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    கதிகலங்க வைக்கும் கும்மிடிப்பூண்டி கொடூரம்..!! வடமாநில தொழிலாளர்கள் லிஸ்ட்..! திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share