உதகை அருகே உள்ள மாவனல்லா பகுதியில் பழங்குடியின பெண்ணை அடித்து கொன்று 16 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த T37 புலி கூண்டில் சிக்கியது. கூண்டில் சிக்கிய 14 வயது மதிக்க தக்க ஆண் புலியை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறை ஆலோசனை
உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தில் கடந்த 24ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை T37 என்ற 14 வயதான ஆண் புலி தாக்கி கொன்றது. இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வனத்துறையினர் புலியைப் பிடிக்க ஐந்து இடங்களில் கூண்டுகள் வைத்து 34 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
தொடக்கத்தில் 12 நாட்கள் அந்த புலியை கண்டு பிடிக்க முடியாமல் வனத்துறை திணறிய நிலையில் கடந்த 4 நாட்களாக புலி மீண்டும் கிராமத்தை ஒட்டியே சுற்றி சுற்றி வந்தது. நேற்று முன்தினம் அந்த புலி நாகியம்மாளை அடித்து கொன்ற இடத்திற்கு அருகே மாட்டை அடித்து கொன்றது. நேற்று மதியம் மீண்டும் ஒரு மாட்டை டித்த நிலையில் படுகாயங்களுடன் மாடு தப்பியது. பட்டபகல் நேரத்திலேயே வரும் அந்த புலி மாடுகளை வேட்டையாடி வந்த புலி, நேற்று அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியின் அருகே உலா வந்ததால் கிராம மக்களும் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மிகுந்த அச்சமடைந்தனர்.
இதையும் படிங்க: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.... தரிசன நேரம் குறித்து தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அப்டேட்...!
இதனால் நேற்று வனத்துறையினர் முற்றுகையிட்ட கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது புலியை தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவில் பிடித்துவிடுவதாகவும் வனத்துறையினர் வாக்குறுதி கொடுத்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், ஆட்கொல்லி புலியான T37 வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. அதனை வனப்பகுதிக்குள் விடுவதா அல்லது வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்வதா என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்பொழுது வரை அந்த பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், தொடர்ந்து புலியை கால்நடை மருத்துவரும் வனத்துறை உயர் அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சம்பளம் கிடையாது... தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் அதிரடி எச்சரிக்கை....!