தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிதி பற்றாக்குறையானது, மாநிலத்தில் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 ஊழியர்களை பாதித்துள்ளதாகவும், கல்வி உரிமைச் சட்டத்தின் அமலாக்கத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பிரதம மந்திரி பள்ளிகள் திட்டத்தை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு கடந்த நிதியாண்டில் ரூ.34,458 கோடி ஒதுக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கு மாறாக, ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து கல்வி நிதி தொடர்பாக வலியுறுத்தினார்.
இதனிடையே கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு கல்வி நிதி ஒதுக்காததற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசின் செயலால் தமிழ்நாட்டு அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மத்திய அரசை எதிர்த்து முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் போர் கொடி தூக்கி உள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டும் கொடுக்கப்படாததால் கோபத்தில் இவ்வாறு பேசுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மதியாதார் தலைவாசல் மிதியாதே! ஓபிஎஸ்- க்கு அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்