பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இபிஎஸ்ஐ வீழ்த்துவதற்கு ஒருங்கிணைத்துள்ளோம் என்றும் தொடர்ந்து ஒருங்கிணைந்து பயணிப்போம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேவர் நினைவிடத்தில் ஒன்று கூடி உள்ளோம் என தெரிவித்தார். ஓபிஎஸ், செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சின்னம்மா சசிகலா எங்கு இருந்தாலும் மனதால் எங்களுடன் என்றும் இணைந்துள்ளார் என்று கூறினார். மழை காலம் தொடங்கி இருப்பதால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அரசாங்கம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம் எனவும் நல்லது செய்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும் என்றும் அதிமுக எங்களுக்கு எதிரியில்லை., இபிஎஸ் மட்டும்தான் எங்கள் எதிரி எனவும் கூறினார்.

முன்னதாக பேசிய ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என்றும் அதிமுகவினர் ஒன்றிணைந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டின் நிறுவுவோம் என ஓபிஎஸ் சூளுரைத்து உள்ளார். அதிமுகவில் பிரிந்துள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டை நிறுவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இணைந்துள்ளோம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்... தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் இணைந்து மரியாதை...!
இறுதியாக பேசிய செங்கோட்டையன், ஒருங்கிணைந்து திமுகவை வீழ்த்துவதற்கு தான் ஒருங்கிணைய வேண்டும் என்று கூறியதாகவும், அதை தான் இப்போதும் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரக்தியின் உச்சியில் இபிஎஸ்… பொய், துரோகம் தவிர வேற ஒன்னுமே இல்ல! பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்…!