பரந்தூர் விமான நிலையம், அதாவது சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக திட்டமிடப்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இது தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் ஒரு கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டமாகும்.
சென்னை மெட்ராஸ் விமான நிலையத்தில் ஏற்கெனவே ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. சென்னை நகர மையத்திலிருந்து சுமார் 60 முதல் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம் இதுவாகும். மொத்தம் சுமார் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் விரிவடைய உள்ளது.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுகள் குறித்து அரசிதழ் வெளியிடப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கான சட்ட விதிகள் அக்டோபர் 18, 2024ல் வெளியிடப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீர்நிலைகளைக் கொண்ட 100 ஹெக்டேர் நிலங்களை பரந்தூர் விமான நிலையத்திற்காக கைப்பற்றப்படும் என்றும் சிறப்புத் திட்டங்கள் என்ற பெயரில் பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலங்களை ஒதுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: CLOSED...! இஸ்ரேலின் டெல் அவீவ் சர்வதேச விமான நிலையம் மூடல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 5 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழு வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டத்தைத் தயாரிக்கிறது என தமிழக அரசு கூறியுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு இறுதி ஒப்புதல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகள்... ஒரு வாரம் தான் டைம்..!! தமிழக அரசே கெடு விதித்த ஹைகோர்ட்...!