காஷ்மீரின் பஹல்காமில் 27 அப்பாவி உயிர்களைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ராஜதந்திர உறவுகள் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்த இந்தியா இன்று, பாகிஸ்தானுக்குள் 4 இலக்குகளையும் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், பாகிஸ்தானில் ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் கோட்டைகளை குறிவைத்தது இந்தியா தாக்கியுள்ளது.
இதையும் படிங்க: "ஆபரேஷன் சிந்தூர்": ரவுண்ட் கட்டிய இந்தியா.. சுக்குநூறான 9 இடங்கள்.. திணறும் பாக்.,!

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ள நிலையில், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயம்டைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்திருக்கிறது. கோட்லி, பகவல்பூர் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகனை தாக்குதல்களை நடத்தியது. அதேபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரை சுற்றியுள்ள மலைகளுக்கு அருகில் உள்ள பகுதியில் நள்ளிரவுக்கு பிறகு பலத்த வெடி சப்தங்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை போர் நடவடிக்கையாகவே கருதுகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “ஒரு போராளியின் போர் தொடங்கி விட்டது. இலக்கை அடையும் வரை நிறுத்தப்போவதில்லை. ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் மோடியுடன் நிற்கிறது” என வரவேற்றுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் அதிரடி அட்டாக்.. உ.பி.க்கு பறந்த ரெட் அலர்ட்..! டிஜிபி கொடுத்த அட்வைஸ்..!