பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான மிக முக்கியமான ஒரு நிலம் சமீபத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 1.4 ஏக்கர் நிலம் தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பழனி சப்-ரெஜிஸ்ட்ரார் ஜஸ்டின் மணிகண்டன் மீது புகார் எழுந்து அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலம் பழனி கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இலவச பார்க்கிங் இடமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது. 1888ம் ஆண்டு ஒரு தான சீட்டு மூலம் இந்த நிலம் கோவில் முட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆவணத்தில் இந்த சொத்து கோவில் பராமரிப்பு, மத நிகழ்வுகள் மற்றும் பக்தர்களுக்கான சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் சொத்தாக விற்கவோ இடமாற்றம் செய்யவோ கூடாது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலம் நீண்ட காலமாக சட்டப் போராட்டத்தின் மையமாக இருந்து வருகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 ஏக்கர் பழனி கோவில் நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்ததாக ஜஸ்டின் மணிகண்டன் மீது புகார் எழுந்தது.
இதையும் படிங்க: பழனி கோயில் நில மோசடி... தீயாய் பரவிய வதந்தியால் டென்ஷன் ஆன அமைச்சர் ரமேஷ்... அறநிலையத்துறை எச்சரிக்கை...!
இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி கோவில் நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜஸ்டின் மணிகண்டனின் முன் ஜாமின் மனு குறித்து சிபிசிஐடி தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்யும் வரை ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்யக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதையும் படிங்க: ஒரு இன்ச் கோவில் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்... கலர் கலரா ரீல் சுத்துறாங்க..! அமைச்சர் ரமேஷ் பேட்டி..!!